திண்டுக்கல்: கடையின் பூட்டை உடைத்து ரூ. 30 ஆயிரம் கொள்ளை

2312பார்த்தது
திண்டுக்கல் கோபால்பட்டியில் சுரேஷ்குமார் என்பவருக்குச் சொந்தமான விவசாய உபகரணங்கள் விற்பனை செய்யும் கடையின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்து, கல்லாவில் இருந்த சுமார் ரூ. 30 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்றனர். காலையில் கடையைத் திறக்க வந்த சுரேஷ்குமார் இந்தச் சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். கருப்பு முழுக்கை சட்டை அணிந்த நபர் இரும்புக் கம்பியால் கடையின் பூட்டை உடைத்து திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

தொடர்புடைய செய்தி