வடமதுரை அருகே எரியோடு குண்டாம் பட்டியைச் சேர்ந்த முருகன் (40) என்பவர் நேற்று இரவு 7:00 மணியளவில் அய்யலூர் தங்கம்மாபட்டி கூட்டுறவு வங்கி அருகே நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றபோது, அவ்வழியே வந்த கார் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வடமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.