திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில், தமிழ்நாடு மின்வாரியத்தினர் மின்கம்பத்தை மாற்றி அமைக்க பள்ளம் தோண்டியபோது ரயில்வே சிக்னல் வயர் சேதமடைந்தது. இதனால் ரயில்வே கிராசிங் கேட் அருகே உள்ள சிக்னல் விளக்கு செயல்படவில்லை. இதன் காரணமாக, வடமதுரை ரயில் நிலையத்தில் நின்று செல்லும் மயிலாடுதுறை-செங்கோட்டை ரயிலுக்கு கேட் கீப்பர் கொடி அசைத்து சிக்னல் கொடுத்து ரயிலை அனுப்பி வைத்தார். மற்ற ரயில்கள் வழக்கம் போல் சென்றன.