தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க, அரசு "தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம்" என்ற திட்டத்தை 2025-26 ஆம் ஆண்டில் செயல்படுத்த ஆணை வெளியிட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒரு லட்சம் பெண்களை தொழில் முனைவோராக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு, வங்கி கடன் ஒப்புதலுக்குப் பிறகு தொழில்முனைவோர் பயிற்சி பெறுவர். பயிற்சி முடிந்ததும், சான்றிதழை வங்கியில் சமர்ப்பித்து கடன் பெற்று, மானியம் விடுவிக்கப்படும். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன், இந்த வாய்ப்பை பயன்படுத்தி மகளிர் வாழ்வாதாரத்தை பெருக்கிக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.