திண்டுக்கல் அருகே தாமரைப்பாடியை சேர்ந்த மனோகரன் மனைவி மணிமேகலை(37) வயிற்று வலி தாங்க முடியாமல் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த வடமதுரை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் வேலுமணி மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மணிமேகலையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.