
நத்தத்தில் மின்சாரம் தாக்கி பரிதாப உயிரிழப்பு
நத்தம்-பெரியமுளையூரைச் சேர்ந்த 62 வயதான தேங்காய் வெட்டும் தொழிலாளி சேது, கடந்த 24-ம் தேதி நத்தம் கோரிமேடு பகுதியில் தென்னை மரத்தில் தேங்காய் வெட்டிக்கொண்டிருந்தபோது, மட்டை ஒன்று மின்கம்பத்தில் விழுந்ததில் மின்சாரம் தாக்கி மரத்திலிருந்து கீழே விழுந்து காயமடைந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்தார். இது குறித்து நத்தம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.







































