மதுபானம் விற்பனை 7 பேர் கைது - 195 பாட்டில்கள் பறிமுதல்

409பார்த்தது
மதுபானம் விற்பனை 7 பேர் கைது - 195 பாட்டில்கள் பறிமுதல்
திண்டுக்கல் நகரில் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த குமரேசன், தண்டபாணி, முனியாண்டி, முருகன், ரவி, பாலச்சந்தர், பாரதி ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டனர். நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி, நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் மீனாட்சி ஆகியோர் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது பூ மார்க்கெட் அருகே, ரயில் நிலையம் சாலை, பாண்டியன்நகர், லாரி பேட்டை, தாடிக்கொம்பு ரோடு, நந்தவனம்ரோடு, முருகபவனம் ஆகிய பகுதிகளில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர்களிடம் இருந்து 195 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.