திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு பகுதியில் சூதாட்ட கிளப்பில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடியதாக மதன்குமார், பிரகாஷ் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர். மாவட்ட S. P. பிரதீப் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், S. P. தனிப்படையினர் வத்தலகுண்டு பைபாஸ் பகுதியில் அதிரடி சோதனை நடத்தி, சூதாட்ட கிளப்பில் பணம் வைத்து சூதாடிய 7 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ. 48 ஆயிரம் பணம் மற்றும் 5 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சம்பவம் குறித்து வத்தலகுண்டு காவல் நிலைய ஆய்வாளர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.