திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே அஞ்சுகம் காலனி பகுதியில் கப்பல்காரர் என்பவரது வீட்டிற்குள் சுமார் 7 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு புகுந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரம் போராட்டத்திற்குப் பிறகு பாம்பு பிடிக்கும் கருவி மூலம் சுமார் 7 அடி நீளம் உள்ள மஞ்சள் சாரை பாம்பை உயிருடன் பிடித்தனர்.