நிலக்கோட்டை அருகே 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில், விளாம்பட்டி காமாட்சிபுரத்தைச் சேர்ந்த அண்ணாவி (75) என்பவரை போலீசார் கைது செய்தனர். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். கைதான முதியவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.