திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே அஞ்சு வீடு அருவியில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், அக்டோபர் 18 அன்று பொள்ளாச்சியைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவர் ஒருவர் பலியானார். இதைத் தொடர்ந்து அந்த அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. தற்போது, போலுார் புலவிச்சாறு அருவிக்கு செல்லவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இங்கு செல்ல முயலும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.