திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பள்ளங்கியில் ஜெயராமன் என்பவர் தனது நிலத்தில் அனுமதி பெறாமல் பொக்லைன் இயந்திரம் கொண்டு பாறையை உடைத்ததாக வில்பட்டி கிராம நிர்வாக அலுவலர் ரேம்ஜித்ராஜா கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.