திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு கலியுக வரத ஐயப்பன் ஆலயத்தில் சபரிமலை யாத்திரை செல்லும் ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை முதல் நாளன்று மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். அதிகாலையில் கணபதி ஹோமத்தை தொடர்ந்து சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. கன்னி சாமிகளுக்கு குருசாமி மாலை அணிவித்து, நூற்றுக்கு மேற்பட்ட பக்தர்கள் சுவாமியே சரணம் ஐயப்பா என்ற சரண கோஷத்துடன் விரதத்தை தொடங்கினர்.