திண்டுக்கல்: இறந்த நிலையில் கிடந்த முதியவர்

593பார்த்தது
திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து கிடந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையிலான போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேற்படி நபர் குறித்து விசாரணை மேற்கொண்டதில் திண்டுக்கல் வேடப்பட்டி பகுதியை சேர்ந்த ராயப்பன் என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி