திண்டுக்கல்: திருச்சியில் இருந்து கொடைக்கானலுக்குச் சென்ற வேன், வத்தலகுண்டு பைபாஸில் டயர் வெடித்து நின்ற லாரி மீது மோதி விபத்திற்குள்ளானது. இதில் குளித்தலை பகுதியைச் சேர்ந்த பரணி பரிதாபமாக பலியானார். மேலும், 21 பேர் படுகாயமடைந்து வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.