திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் தனியார் திருமண மண்டபத்தில் ஆதித்தமிழர் கட்சியின் திண்டுக்கல் மாவட்ட செயற்குழு கூட்டம் ஆதித்தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் வினோத் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக ஆதித்தமிழர் கட்சியின் பொதுச்செயலாளர் விஸ்வைகுமார் பங்கேற்று சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில் வருகை தந்த மேற்கு மண்டல இளைஞரணி செயலாளர் க. பாண்டி வரவேற்றார்.
இக்கூட்டத்தில் 'காலனி' என்ற சொல்லை அகற்றிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தல், கோவையில் நடைபெறும் முப்பெரும் விழாவிற்கு பெருந்திரளாக கலந்து கொள்ளுதல், தமிழக அரசுக்கு வர வேண்டிய நிதியை வழங்காமல் இருக்கும் ஒன்றிய அரசை வன்மையாக கண்டித்தல், புதிய மாவட்ட நிர்வாகிகளை தேர்வு செய்தல், உள்இட ஒதுக்கீடு 3% அருந்ததியர்கள் முழுமையாக பயன்படுத்தாமல் இருப்பதற்கு காரணமாக இருக்கும் அரசு ஆணை 61-ஐ ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.