பெரியகுளம் அரசு தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவ மாணவியர்கள், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மலர் சந்தையில் கள ஆய்வு மேற்கொண்டனர். இங்கு விவசாயிகள் கொண்டு வரும் பூக்களுக்கு விலை நிர்ணயம் செய்யப்படும் முறை, கொள்முதல் செய்யப்படும் பூக்கள் ஏற்றுமதி செய்யப்படும் விதம் குறித்து வியாபாரிகள் மற்றும் ஏற்றுமதியாளர்களிடம் கேட்டறிந்தனர். கள ஆய்வில் பங்கேற்ற பேராசிரியர்கள், மலர் சந்தைக்கு வரும் பூக்களின் ரகங்கள் மற்றும் அவை விளைவிக்கப்படும் பகுதிகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கமளித்தனர்.