கோடை விடுமுறையால் கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதி, கடும்
போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நான்கு சுற்றுலாத் தலங்களுக்கு வரும் 31ஆம் தேதி வரை கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.