கொடைக்கானல் அருகே புலி தாக்கியதில் குதிரை உயிரிழப்பு

0பார்த்தது
கொடைக்கானல் அருகே புலி தாக்கியதில் குதிரை உயிரிழப்பு
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், கூக்கால் ஊராட்சி பழம்புத்தூரை சேர்ந்த கோவிந்தராஜன் என்பவர் தனது குதிரையை வீட்டின் அருகே கட்டி வைத்திருந்தார். நள்ளிரவில் வந்த புலி குதிரையை தாக்கி கொன்றது. தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பதிவான கால் தடயங்களை ஆய்வு செய்து, புலி வந்ததை உறுதி செய்தனர். இது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :