கொடைக்கானல்: போதைக் காளான் பறிமுதல்; இளைஞா் கைது

65பார்த்தது
கொடைக்கானல்: போதைக் காளான் பறிமுதல்; இளைஞா் கைது
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான பூண்டி பகுதியில் போதைக் காளான் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து போலீஸார் அந்தப் பகுதியில் ரோந்து சென்றனர். பூண்டி பேருந்து நிலையம் அருகே சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த சின்னப்பன் மகன் சூர்யாவை (30) போலீஸார் பிடித்து சோதனை நடத்தினர்.

அப்போது, அவர் போதைக் காளானை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, சூர்யாவை போலீஸார் கைது செய்து, அவரிடமிருந்து 25 கிராம் போதைக் காளானைப் பறிமுதல் செய்தனர்.
Job Suitcase

Jobs near you