திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் புத்தாண்டை ஒட்டி அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருவதையடுத்து சோதனைச் சாவடிகளில் நடத்தப்பட்ட வாகன சோதனையில் மெத்தம்பெட்டமைன் பிடிபட்டது. கேரளாவைச் சேர்ந்த பதிவெண் கொண்ட காரில் இருந்த ஒரு பெண் உள்பட 4 பேரைப் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.