பழனியை அடுத்த பாப்பம்பட்டி சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 76 வயது மூக்கையா என்பவரை போலீஸார் கைது செய்து, 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதேபோல், நெய்க்காரபட்டி கடைவீதிப் பகுதியில் சனிக்கிழமை ரோந்துப் பணியின்போது, விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 45 வயது மீனா என்பவரையும் போலீஸார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.