திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் தேமுதிக சார்பில் 'உள்ளம் நாடி இல்லம் தேடி' என்ற பிரச்சார பயண பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், 2026 தேர்தல் களம் மாறுபட்டதாக அமையும் என்றும், தேமுதிக மகத்தான கூட்டணியில் இடம்பெற்று, இறைவன் அருளால் வெற்றி பெற்று, உரிய அங்கீகாரத்துடன் கூட்டணி அமைச்சரவையில் பங்கேற்கும் வாய்ப்பு உள்ளது என்றும் பேசினார். இக்கூட்டத்தில் தேமுதிக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.