அம்மையநாயக்கனூர் அருகே சிறுமலை அடிவாரத்தில் உள்ள சாத்தா கோவில் ஓடையில் 10 அடி நீள மலைப்பாம்பு சுருண்டு கிடந்ததைக் கண்டு கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக நிலக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலர் பாஸ்கரன் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து, பாம்பை லாவகமாகப் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.