திண்டுக்கல்: விபத்தில் உயிரிழந்த வாலிபருக்கு ரூ. 38 லட்சம் இழப்பீடு

1351பார்த்தது
திண்டுக்கல்: விபத்தில் உயிரிழந்த வாலிபருக்கு ரூ. 38 லட்சம் இழப்பீடு
திண்டுக்கல்லைச் சேர்ந்த பாலரஞ்சித்குமார்(28) தேனியில் தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்தார். 2022-ல் இருசக்கர வாகனத்தில் சென்றபோது கார் மோதி விபத்தில் உயிரிழந்தார். இதற்கான இழப்பீடு கோரி அவரது தந்தை சின்னத்தம்பி வழக்கு தொடர்ந்தார். திண்டுக்கல் சிறப்பு சார்பு நீதிமன்ற நீதிபதி சோமசுந்தரம், காப்பீட்டு நிறுவனத்திற்கு ரூ. 38,46,467 இழப்பீட்டுத் தொகையை வட்டியுடன் வழங்க உத்தரவிட்டார்.