திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே பள்ளப்பட்டி ஊராட்சி பகுதியில் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில், ரூபாய் 15 லட்சம் செலவில் இரண்டு ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன் தொடங்கி வைத்த இந்தப் பணியின்போது, ஆவாரம்பட்டி சாலையில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியில், எதிர்பாராதவிதமாக குடிநீர் குழாயில் துளைத்துவிட்டதால் தண்ணீர் பீறிட்டு அடித்தது. இதனால் அப்பணியில் சிறிது நேரம் தடை ஏற்பட்டது. பின்னர், உடைக்கப்பட்ட குடிநீர் குழாய் சரிசெய்யப்பட்டு, ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி மீண்டும் தொடங்கப்பட்டது.