கொடைக்கானல்: தொழிலாளியை கடித்துக் குதறும் தெருநாய்கள்

929பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் எம். எம். தெருவில் வடமாநிலத்தைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி ஜோகோபாலு (39) தேநீர்க் கடைக்குச் சென்றபோது, தெருநாய்கள் அவரை கடித்துக் குதறின. இதில் பலத்த காயமடைந்த அவர் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.