நிலக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் சுமார் 3 ஆயிரம் மாணவிகள் படித்து வருகின்றனர். முதுநிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவிகள் தங்களுக்கு லேப்டாப் வழங்கக் கோரி கல்லூரி முன்பு நிலக்கோட்டை - வத்தலகுண்டு சாலையில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆதரவு தெரிவிக்க வந்த தமிழக வெற்றி கழக நிர்வாகிகளை போலீசார் அழைத்துச் சென்றனர். லேப்டாப் வழங்கவில்லை என்றால், வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சிக்கும் வாக்களிக்க மாட்டோம் என மாணவிகள் தெரிவித்தனர்.