அடைப்பை சரி செய்து மழை நீரை வெளியேற்றிய தவெக MLA

369பார்த்தது
அடைப்பை சரி செய்து மழை நீரை வெளியேற்றிய தவெக MLA
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியில் பெய்த கனமழை காரணமாக பேருந்து நிலையத்தில் மழை நீர் குளம் போல் தேங்கியது. இதனால் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நிலக்கோட்டை தவெக MLA அய்யனார், பேரூராட்சி அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தும் வெகு நேரமாக பணியாளர்கள் யாரும் வராததால், தானே களம் இறங்கி மழைநீர் வெளியேறும் கழிவு நீர் கால்வாயில் ஏற்பட்ட அடைப்பை நீக்கி மழை நீரை வெளியேற்றினார். இதனை கண்ட பொதுமக்கள், பயணிகள் மற்றும் வியாபாரிகள் MLA. அய்யனாரை வெகுவாக பாராட்டினர்.

தொடர்புடைய செய்தி