காட்டு மாட்டை புதைத்த விவகாரம் - ஒருவர் கைது

59பார்த்தது
காட்டு மாட்டை புதைத்த விவகாரம் - ஒருவர் கைது
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு பள்ளப்பட்டியை சேர்ந்த விவசாயி ராமு. இவர் பயிர்களை விலங்குகளிடமிருந்து காப்பாற்ற மின்வேலி அமைத்து இரவு நேரங்களில் மின்சாரத்தை செலுத்தினார். சில தினங்களுக்கு முன் காட்டுமாடு ஒன்று மின்வேலியில் சிக்கி இறந்தது. இதைப்பார்த்த ராமு, அதே பகுதியை சேர்ந்த கருப்பையா, செல்வம் உதவியுடன் தோட்டத்தில் குழி தோண்டி புதைத்தனர்.

இதையடுத்து தகவல் அறிந்த சிறுமலை ரேஞ்சர் மதிவாணன் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்தில் JCP மூலம் புதைக்கப்பட்ட காட்டுமாட்டை தோண்டி எடுத்து பரிசோதனை செய்தனர.

மேலும் இது தொடர்பாக கருப்பையா கைது செய்யப்பட்டார். மற்ற இருவரையும் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி