திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மலர் சந்தை அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்குச் சொந்தமான தடுப்புச் சுவர் இடிக்கப்பட்டு புதிய கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தச் சுவர் இடிக்கப்பட்டதால், விவசாயிகள் மலர் சந்தைக்குள் செல்லும் முக்கியப் பாதை தடைபட்டுள்ளது. பல நாட்கள் ஆகியும் பணிகள் தொடங்கப்படாததால், விவசாயிகள் ஆபத்தான சிறிய பாதையைப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், அவர்களின் அன்றாடப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.