டிப்பர் லாரி மோதி மூன்று பேர் உயிரிழப்பு

7பார்த்தது
டிப்பர் லாரி மோதி மூன்று பேர் உயிரிழப்பு
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே இருசக்கர வாகனத்தின் மீது டிப்பர் லாரி மோதியதில் தாத்தா, பாட்டி, பேத்தி என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர். தெப்பத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த காத்தவராயன் (60) தனது மனைவி ஜோதி மற்றும் பேரக்குழந்தைகள் ஹர்சன், ஹர்ஷினி ஆகியோருடன் ஊர் திரும்பிக் கொண்டிருந்தபோது சாந்திபுரம் பிரிவு அருகே இந்த விபத்து நிகழ்ந்தது. இதில் ஒன்பது வயது சிறுமி வர்ஷினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த காத்தவராயன் மற்றும் ஜோதி ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். சிறுவன் ஹர்ஷன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விருவீடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you