வத்தலக்குண்டு: கோவிலில் மக்கள் காத்திருப்பு போராட்டம்

57பார்த்தது
வத்தலக்குண்டு: கோவிலில் மக்கள் காத்திருப்பு போராட்டம்
திண்டுக்கல், பழைய வத்தலகுண்டு அருள்மிகு மகா பரமேஸ்வரி மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவின் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற உள்ள நிலையில் கடந்த ஆண்டு திருவிழாவின்போது புதிதாக பட்டியலின சமூக மக்களுக்கு என மண்டகப்படி உரிமை வழங்கப்பட்டது. 

இந்நிலையில் இந்த ஆண்டு திருவிழாவில் புதிதாக வழங்கப்பட்ட மண்டகப்படிகள் ரத்து செய்யப்பட்டு பழைய நடைமுறை தொடர்பான இந்து சமய அறநிலையத்துறை திடீரென அறிவிப்பு வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து அதிர்ச்சி அடைந்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு மீண்டும் மண்டகப்படி உரிமை வேண்டுமென வலியுறுத்தி அருள்மிகு மகா பரமேஸ்வரி மாரியம்மன் கோவில் வளாகத்தில் பந்தல் அமைத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதனைத் தொடர்ந்து நிலக்கோட்டை வட்டாட்சியர் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி