திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ராஜதுரை (23), காதலித்த பெண்ணின் தந்தையால் தாக்கப்பட்டதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து விளாம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனைக்குப் பிறகு, உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர். காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து, உடலைப் பெற்றுச் சென்றனர்.