
இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டாஸ்!
கள்ளிமந்தயம் பகுதியில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்த நாகஅர்ஜுன் (26) மற்றும் எரியோடு கொலை வழக்கில் தொடர்புடைய ஆனந்தராஜ் (33) ஆகியோர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் சரவணன் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இருவரின் குற்றச் செயல்களைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.






































