திண்டுக்கல்லில் பேட்டரி கடை அதிபர் ஜான்கிறிஸ்டோபர் (52) வீட்டில் மர்ம நபர்கள் நுழைந்து 19 பவுன் தங்க நகை, 100 கிராம் வெள்ளி மற்றும் ரூ. 11 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். சென்னையில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றுவிட்டு திரும்பியபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டு, அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.