வெளியூர் நபர்களை தாக்கிய உள்ளூர் இளைஞர்கள் 4 பேர் கைது

1பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே அட்டுவம்பட்டி கிரேஸ் பகுதியில் சுப நிகழ்வுக்காக சீர்வரிசை கொண்டு சென்ற இளைஞர்கள் சாலையை மறித்து ஆட்டம் பாடியதால், கோவை பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் கோவை இளைஞர்கள் 3 பேர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொடைக்கானல் காவல்துறையினர் அட்டுவம்பட்டி பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களை கைது செய்துள்ளனர். மேலும் 10க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் தொடர்வதால், அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி