திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமந்தயம், பெருமாள்கோயில் வலசை பகுதியைச் சேர்ந்த சண்முகம் என்பவரது வீட்டில், மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பீரோவில் இருந்த 5 பவுன் தங்கநகை மற்றும் ரூ. 15 ஆயிரம் பணத்தை அவர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து கள்ளிமந்தயம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.