புகையிலை பொருட்கள் விற்பனை 7 கடைகளுக்கு அபராதம்

1பார்த்தது
புகையிலை பொருட்கள் விற்பனை 7 கடைகளுக்கு அபராதம்
திண்டுக்கல் மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கலைவாணி உத்தரவின் பேரில், அதிகாரிகள் செல்வம், முருகன், ஜோதிமணி குழுவினர் தாடிக்கொம்பு, சில்வார்பட்டி, கோனூர், ரெட்டியார்சத்திரம், அணைப்பட்டி பகுதிகளில் திடீர் சோதனை நடத்தினர். இதில் 9 கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, 17 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 2 கடைகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும், 7 கடைகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ. 25 ஆயிரமும் என மொத்தம் ரூ. 3.25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், 9 கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது.