பட்டிவீரன்பட்டி காந்திபுரத்தில் வனப்பகுதியில் இருந்து தப்பி வந்த கடமான் ஒன்று, இரண்டு வீடுகளுக்கிடையிலான சந்துப் பகுதியில் சுவற்றின் இடுக்கில் சிக்கிக் கொண்டது. வெளியேற முடியாமல் உயிருக்கு பயந்து கத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தீயணைப்புத் துறையினர் மற்றும் வனத்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் கடமானை மீட்டு பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் விட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.