திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர், மணலூர் ஊராட்சி, பெரும்பாறையைச் சேர்ந்த கருப்பையா(58) என்பவர் தனியார் எஸ்டேட்டில் கூலி வேலைக்குச் சென்றபோது, திடீரென காட்டுமாடு ஒன்று அவரைத் தாக்கியது. இதில் கருப்பையா படுகாயமடைந்து, சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.