திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் இன்று 8-ம் தேதி, ஆண்டிப்பட்டி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து பழைய வத்தலகுண்டு பகுதியில் வந்தபோது திடீரென உடைந்து கீழே விழுந்தது. இதனால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அச்சமடைந்து உடனடியாக கீழே இறங்கினர். இந்தச் சம்பவத்திற்கான காரணத்தைக் கண்டறிய போக்குவரத்துத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.