இரவோடு இரவாக போடப்பட்ட தரமற்ற தார் சாலை

3பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் ஸ்ரீராமபுரம் பேரூராட்சியில், பாவா நகர் பகுதியில் போடப்பட்ட தரம் அற்ற தார் சாலையால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன்பாக இரவோடு இரவாக போடப்பட்ட இந்த சாலை, வாகனங்கள் சென்றாலே குழிகளும் பள்ளங்களும் ஏற்பட்டு பயனற்று போனது. இதனால் அரசு பணம் பெருமளவில் வீணானது என்றும், தரமற்ற சாலையால் மிகுந்த சிரமத்திற்கும் ஏமாற்றத்திற்கும் உள்ளாவதாகவும் குடியிருப்பு வாசிகள் குறை கூறுகின்றனர். மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தரமான சாலை அமைத்துத் தர வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.