திண்டுக்கல்லில் விபத்து: காரில் தீப்பற்றி பலி

1001பார்த்தது
திண்டுக்கல் அருகே, சிங்கம்புணரியைச் சேர்ந்த ராசியப்பன் என்பவர் காரில் கோவைக்குச் சென்றபோது, ஒட்டன்சத்திரம்-கள்ளிமந்தையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானார். கார் தீப்பிடித்து எரிந்த நிலையில், விரைந்து வந்த காவலர்கள் தீயை அணைத்து ராசியப்பனை மீட்டனர். இருப்பினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி