திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அன்னை வேளாங்கண்ணி பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட உள்விளையாட்டு அரங்கு திறப்பு விழா நடைபெற்றது. கிராமப்புற மாணவர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்ட இந்த அரங்கினை கத்தோலிக்க திருச்சபை மதுரை மண்டல பேராயர் அந்தோணிசாமி திறந்து வைத்தார். விளையாட்டு வீரர்களின் நலனுக்காக கூட்டுப் பிரார்த்தனையும் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்குத்தந்தை எட்வர்ட், பள்ளி முதல்வர் பால்ராஜ், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.