கொடைக்கானல் மேல்மலைப் பகுதியைச் சேர்ந்த பரமானந்தம் (60) தனக்குச் சொந்தமான நிலத்தை கேரளாவைச் சேர்ந்த பெண்மணிக்குக் குத்தகைக்குக் கொடுத்தார். ஆனால், அந்தப் பெண்மணி முதியவரை ஏமாற்றி நிலத்தை வேறு ஒருவருக்கு விற்றுவிட்டார். இதனால் மனமுடைந்த பரமானந்தம், மதுபோதையில் கொடைக்கானல் காவல் நிலையம் அருகே சாலையின் நடுவே தனது புகார் மனுக்களின் நகல்களை அடுக்கி வைத்து நூதன முறையில்
போராட்டம் நடத்தினார். காவல்துறையினர் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்க அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.