கேரள லாட்டரி விளம்பரங்களுக்கு தடை: திண்டுக்கல் ஆட்சியரிடம் சமூக ஆர்வலர் மனு

875பார்த்தது
கேரள லாட்டரி விளம்பரங்களுக்கு தடை: திண்டுக்கல் ஆட்சியரிடம் சமூக ஆர்வலர் மனு
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் அன்புரோஸ், திண்டுக்கல் மற்றும் தமிழக திரையரங்குகளில் கேரள லாட்டரி விளம்பரங்கள் திரையிடுவதை தடை செய்யக்கோரி மனு அளித்தார். திண்டுக்கல்லில் உள்ள ஆர்த்தி சினி பிளக்ஸ், உமா-ராஜேந்திரா திரையரங்கம், ஒட்டன்சத்திரம் கார்த்திக் திரையரங்கம் போன்ற இடங்களில் கேரள லாட்டரி விளம்பரங்கள் வெளியிடப்படுவதாக அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த விளம்பரங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி