திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் திடீர் நகரைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் செல்லப்பாண்டி, தனது மகள் ஸ்ரீமதி மற்றும் மகன் லோகேஷ் ஆகியோருக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்துவிட்டு தானும் குடித்தார். மகன் லோகேஷ் பாலின் சுவை மாறியதால் குடிக்கவில்லை. செல்லப்பாண்டி உயிரிழந்த நிலையில், விஷம் கலந்த பாலைக் குடித்த மகள் ஸ்ரீமதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.