தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெற்ற அரசு விழாவில் 2025-2026 ஆம் ஆண்டுக்கான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மாணவ, மாணவியருக்கு மிதிவண்டிகளை வழங்கினார். ஒட்டன்சத்திரம் தொகுதியில் முதல் கட்டமாக 152 மாணவர்களுக்கு ரூ. 6,64,125 மதிப்பீட்டில் மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. அடுத்த கட்டங்களில் மீதமுள்ள மாணவர்களுக்கும் வழங்கப்படும்.