உடல் உறுப்புகள் தானம் செய்தவர்களுக்கு அரசு மரியாதை

519பார்த்தது
உடல் உறுப்புகள் தானம் செய்தவர்களுக்கு அரசு மரியாதை
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அருகே சானிப்பட்டியைச் சேர்ந்த சுகந்தம் என்பவர் சாலை விபத்தில் படுகாயம் அடைந்து ஈரோடு, பெருந்துறை மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டு நேற்று இரவு 12 மணியளவில் உயிரிழந்தார். அவரது உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டதையடுத்து, பழனி வருவாய் கோட்டாட்சியர் கண்ணன் அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்து மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

தொடர்புடைய செய்தி